இந்தியா

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

Published On 2024-01-30 08:02 GMT   |   Update On 2024-01-30 09:31 GMT
  • அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம்.
  • வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது.

திருப்பதி:

அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி வந்தார். இரவு வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசித்தார்.

பிறகு மாட வீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி தரிசனம் செய்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை என்பது செவ்வாய்கிழமை மட்டுமே இந்த தரிசன நடைபெறும்.

அரை மணி நேரம் நிதானமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்கு ஒரு நபருக்கு 1250 ரூபாய் கட்டணமாகும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். அனைவரும் தரிசனம் செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை தான் கடைபிடிக்கப்படுகிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்து பேச தலைமை கழகம் 4 குழுக்களை அமைத்துள்ளது. அவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News