இந்தியா
ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரியின் மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- மதுபானம் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அதிகாரிகள் சோதனை
- சில பேருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது
ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரியாக இருப்பர் ராமேஷ்வர் ஒராயோன். இவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபானம் மோசடி தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பேருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.