இந்தியா

வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு

இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு

Published On 2022-06-17 20:07 GMT   |   Update On 2022-06-17 20:07 GMT
  • இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
  • இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

புதுடெல்லி:

இந்தியா, வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.

இந்நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

Tags:    

Similar News