இந்தியா

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு

Published On 2023-11-10 04:52 GMT   |   Update On 2023-11-10 05:03 GMT
  • இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
  • அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

புதுடெல்லி:

இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று டெல்லியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். இருதரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags:    

Similar News