இந்தியா

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: தலைவர், செயலாளர் பதவியை பிடித்தது ஏபிவிபி

Published On 2025-09-19 17:06 IST   |   Update On 2025-09-19 17:11:00 IST
  • தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி பிடித்தது.
  • துணைத் தலைவர் பதவிக்கான பேட்டியில் காங்கிரஸ் ஆதரவு NSUI வேட்பாளர் வெற்றி பெற்றார்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (DUSU) தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.75 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 52 மையங்களில் 195 வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 711 EVMs ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 39.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ்.-யின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ஏபிவிபி- ABVP) முக்கிய பதவிகளை பிடித்தது.

தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவியை பிடித்த நிலையில், காங்கிரஸ் ஆதரவு NSUI துணைத் தலைவர் பதவியை பிடித்தது.

ABVP-யின் ஆர்யன் மான் தலைவர் பதவியில் 28841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். NSUI சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் சவுத்ரி 12654 வாக்குகள் பெற்றார்.

துணைத் தலைவருக்கான போட்டியில் NSUI சார்பில் போட்டியிட்ட ராகுல் ஷன்ஸ்லா 29339 வாக்குகளும், ஏபிவிபி-யின் கோவிந்த் தன்வர் 20547 வாக்குகள் பெற்றனர்.

தலைவர்- ஆர்யன் மான் (ஏபிவிபி)

துணைத் தலைவர்- ராகுல் ஜன்ஸ்லா (NSUI)

செயலாளர்: குணால் சவுத்ரி (ஏபிவிபி)

இணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)

ஆர்யன் மான் ஹரியானா மாநிலம் பஹதுர்காவைச் சேர்ந்தவர். ஹன்ஸ்ராஜ் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நுலக அறிவியல் முதுகல பட்டம் படித்து வருகிறார்.

Tags:    

Similar News