இந்தியா

ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.. ஐ.டி ஊழியர் உட்பட 13 பேர் கைது

Published On 2025-09-06 23:57 IST   |   Update On 2025-09-07 00:06:00 IST
  • மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது.

இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து மகாராஷ்டிரா காவல்துறை ஐதராபாத்தில் புறநகர்ப் பகுதியான செராமல்லியில் தனியார் ரசாயன தொழிற்சாலையை சோதனையிட்டது.

இந்த ஆய்வுகளின் போது, மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலையில் இருந்த ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களுடன் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Tags:    

Similar News