இந்தியா

உத்தரகாண்ட் விபத்து- சுரங்கப்பாதை தோண்டும் பணி மீண்டும் தொடங்கியது

Published On 2023-11-22 05:24 GMT   |   Update On 2023-11-22 05:24 GMT
  • சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது.
  • ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்," இதுவரை 800 விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை செருகப்பட்டுள்ளன.

ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக மீட்புப் பணிகள் தீவிரமாகும்" என்றார்.

Tags:    

Similar News