வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு
- நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்று இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
- நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வக்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்று பின்னர் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், நீதிமன்றத்தை நாடுவோம் எனத் தெரிவித்திருந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல் அசாதுதீன் ஓவைசியும் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா வழக்கு தொடர்ந்துள்ளார். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இதுவரை 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையை மீறும் வகையில் அதற்கு எதிராக உள்ள சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.