இந்தியா
காற்று மாசுடன் பனிமூட்டம் - திணறும் தலைநகர்
- மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
- ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது.
காற்றின் தரம் அபாயகர நிலையில் இருப்பதை அடுத்து டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டார். இதையடுத்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவானது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசுடன் பனிமூட்டமும் சூழ்ந்து கொண்டது. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.