இந்தியா

ரசீது இல்லாமல் கொரியா வாலிபருக்கு அபராதம் விதித்த டெல்லி போலீஸ்காரர்- வீடியோ வெளியானதால் 'சஸ்பெண்டு'

Published On 2023-07-24 07:24 GMT   |   Update On 2023-07-24 07:24 GMT
  • போலீஸ்காரர் கொரியா வாலிபரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரத்தை கட்டுமாறு கூறியுள்ளார்.
  • உரிய ரசீது இல்லாமல் அபராதம் விதித்ததற்காக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் மகேஷ்சந்த் என்ற போலீஸ்காரர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விதிமுறையை மீறி கார் ஓட்டியதாக கொரியா நாட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அபராதம் விதித்துள்ளார்.

அப்போது அந்த போலீஸ்காரர் கொரியா வாலிபரிடம் அபராத தொகை ரூ.5 ஆயிரத்தை கட்டுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர் ரூ.500 வழங்குவது போன்று வீடியோ காட்சி சமூக வலைத்தளங்ளில் வெளியானது. இதைத்தொடர்ந்து உரிய ரசீது இல்லாமல் அபராதம் விதித்ததற்காக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News