'நாயக்' - 'ஜனநாயக்' - 'கல்நாயக்' - 'நாலாயக்' - பீகார் தேர்தல் நிலவரம் குறித்து டெல்லி முதல்வர்
- தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- தன்னை 'நாயக்' என்று நினைப்பவனுக்கு, பீகார் மக்களின் இதயங்களை 'ஜனநாயக்' என்று ஆள்பவர் மாநிலத்தை ஆள்வார் என்று கூற விரும்புகிறேன்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பீகார் மக்கள் தங்கள் நலனை அறிவார்கள். கடந்த 15 ஆண்டுகளாக பீகாரின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் மட்டுமே இது சாத்தியம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், முன்பை விட அதிக வாக்குகளையும் இடங்களையும் பெறுவோம் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தன்னை 'நாயக்' என்று நினைப்பவனுக்கு, பீகார் மக்களின் இதயங்களை 'ஜனநாயக்' என்று ஆள்பவர் மாநிலத்தை ஆள்வார் என்று கூற விரும்புகிறேன். ஊழலில் ஈடுபட்டு பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் 'கல்நாயக்'களாக சிறைக்குச் செல்வார்கள், மக்களை தவறாக வழிநடத்த விரும்பும் 'நாலாயக்'கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறையை கழிப்பார்கள் என்று அவர் கூறினார்.