இந்தியா

கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

Published On 2025-11-12 00:27 IST   |   Update On 2025-11-12 00:47:00 IST
  • குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.

கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும் குணப்படுத்தமுடியாத காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார். 

Tags:    

Similar News