இந்தியா
இந்தியாவில் குற்றச்செயல்- வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற இருவர் கைது
- குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
- இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்பி சென்ற ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் கார்க் ஜார்ஜியாவுக்கு தப்பி சென்றார். இந்த நிலையில் அரியானா போலீசார் அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஜார்ஜியாவில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் கார்க்கை கைது செய்தனர்.
அதேபோல் பானு ராணா என்பவரை அமெரிக்காவில் கைது செய்துள்ளார். இவர் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர். இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.