இந்தியா

டெல்லி சாலையில் கட்டிப்பிடித்தபடி ஸ்கூட்டர் ஓட்டிய தம்பதி

Published On 2023-05-16 11:41 IST   |   Update On 2023-05-16 11:41:00 IST
  • டெல்லியில் பரபரப்பான ஒரு சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
  • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் பரபரப்பான ஒரு சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஷாலுகாஷ்யப் தனேஜா என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News