இந்தியா
உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு... இணையத்தில் டிரெண்டாகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மன்னிப்பு கடிதம்
- பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த ட்ரெண்ட் தொடங்கியது.
- இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது.
இணையத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் 'Husky Dance' நடனம் இணையத்தில் ட்ரெண்டானது.
'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.
இந்நிலையில், 'Husky Dance' ட்ரெண்ட்-ஐ தொடர்ந்து தற்போது கார்ப்ரேட் நிறுவனங்களின் மன்னிப்பு கடிதம் சமூக வலைதளங்களில் புதிய ட்ரெண்ட்-ஆக மாறி வைரலாகி வருகிறது
ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன், ரிலையன்ஸ், அதானி, PVR, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவையாக மன்னிப்பு கடிதங்களை பதிவிட்டு வருகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடங்கிய இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.