இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து - இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்பு, 600 பேர் படுகாயம்

Published On 2023-06-02 15:08 GMT   |   Update On 2023-06-02 20:39 GMT
  • இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன.
  • ஒடிசா மாநிலம் பஹானாகா அருகே இந்த விபத்து நடந்துள்ளது

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரெயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.

உள்ளூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநில தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த கோர விபத்தில் இதுவரை 120க்கு மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News