இந்தியா

நேற்று சர்ச்சை பேச்சு.. இன்று ஆதரவு பேச்சு..- உ.பியில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை

Published On 2024-04-22 16:56 GMT   |   Update On 2024-04-22 16:56 GMT
  • ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
  • இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.

நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.

ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News