இந்தியா

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

Published On 2022-12-15 11:18 GMT   |   Update On 2022-12-15 12:30 GMT
  • பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மசோதாவை அறிமுகம் செய்தார்.
  • இன்று நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி:

தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதாவை, நேற்று முன்தினம் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News