இந்தியா

கே.சி. வேணுகோபால்

காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு - பாதயாத்திரை தொடரும் என காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2023-01-21 19:29 GMT   |   Update On 2023-01-21 19:29 GMT
  • ஜம்மு காஷ்மீரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
  • இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, கடந்த 18-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நேற்று இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்ததுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்துப் பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News