இந்தியா

(கோப்பு படம்)

சோனியா காந்திக்கு சம்மன் எதிரொலி- நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

Published On 2022-07-13 23:11 GMT   |   Update On 2022-07-13 23:11 GMT
  • பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம்
  • சோனியாகாந்தி ஒரு புலி, அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் பயப்பட மாட்டார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ந் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 18 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பைப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு புலி என்றும், அவர் பயப்பட மாட்டார் என்றும் கூறினார். இது போன்ற பல விஷயங்களை அவர் ஏற்கனவே சந்தித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த மாதம் ராகுல்காந்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக அமலாக்க அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News