இந்தியா

திடீர் நெஞ்சுவலி: கடும் சவாலை எதிர்கொண்டு சீனாவை சேர்ந்தவரை மீட்ட இந்திய கடலோர காவல்படை

Published On 2023-08-17 12:42 IST   |   Update On 2023-08-18 15:48:00 IST
  • பனாமா நாட்டு கொடியுடன் கூடிய ஆராய்ச்சி கப்பல் உதவியை நாடியது
  • முதலுதவி செய்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்

மும்பை அருகே அரபிக்கடலில் பனாமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர்.

மருத்துவ உதவி என்பதால் உடனடியாக சீன நாட்டினர் உயிரை காப்பாற்ற இந்திய கடலோர காவல்படை கடலுக்குள் சென்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக, மோசமான வானிலை நிலவியது.

என்றாலும், கடலோர காவல்படை, அதை எதிர்கொண்டு கப்பலை அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, ஹெலிகாப்டர் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், கப்பல் ஏஜென்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடலோர காவல்படையின் துரித நடவடிக்கையால் சீன நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News