இந்தியா
கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்- முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு
- முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.
- கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று காலை 9 மணியளவில் கிறிஸ்துவ கூட்டரங்களில் 3 குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இதற்காக, முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.