இந்தியா

பொருளாதாரம் மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்பு- ப.சிதம்பரம்

Published On 2025-01-31 12:43 IST   |   Update On 2025-01-31 12:43:00 IST
  • நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் விகிதம் 45 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
  • கடந்த 4 முதல் 5 ஆண்டுகள் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராஜீவ் கவுடா மற்றும் அவரின் குழுவினர் தயாரித்த அறிக்கையை டெல்லியில் ப.சிதம்பரம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. முந்தைய ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் விகிதம் 45 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது வழங்கும் பணி நியமன கடிதங்கள் மூலம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறதே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை.

கடந்த 4 முதல் 5 ஆண்டுகள் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. உணவு, கல்வி, சுகாதாரப் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது. பணக்காரர்களுக்கும், ஏைழகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதை சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Tags:    

Similar News