இந்தியா

சென்னை-நெல்லூர் சாலையில் கடும் வெள்ளம்: 4 அடி உயரம் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முடக்கம்

Published On 2023-12-05 08:43 GMT   |   Update On 2023-12-05 08:43 GMT
  • நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
  • தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மிச்சாங் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடும் வெள்ளம் சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.

திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள கோகுல் கிருஷ்ணா என்ஜினியரிங் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. மேலும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள கலங்கிய ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக சென்னை- நெல்லூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் சாலையில் இருபுறமும் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.

அனைத்து வாகனங்களும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து திருப்பி விடப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன. பல இடங்களில் தாழ்வான பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை-நெல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.

இந்த வழியாக யாரும் பயணம் செய்ய வேண்டாம் என திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News