இந்தியா

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றம்- இஸ்ரோ அறிவிப்பு

Published On 2023-08-20 15:33 IST   |   Update On 2023-08-20 22:21:00 IST
  • ஏற்கனவே மாலை 5.45 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.
  • நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது .

சந்திரயான்- 3 விண்கலனம் வரும் 23ம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே மாலை 5.45 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரஷியா விண்கலம் லூனா-25 தோல்வியில் முடிந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News