இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகர ராவ்

Published On 2023-12-15 07:06 GMT   |   Update On 2023-12-15 07:36 GMT
  • கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Tags:    

Similar News