இந்தியா

நீதிபதி போன்று நடித்த வக்கீல் கைது

Published On 2024-05-22 09:07 GMT   |   Update On 2024-05-22 09:07 GMT
  • ஆவணங்களை காட்ட மறுத்த அவர் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • தன்னை மாஜிஸ்திரேட் எனக்கூறி போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பிரகாஷ்சிங் மர்வா, எதுவாக இருந்தாலும் எனக்கு செல்லான் அனுப்புங்கள் எனக்கூறி போலீசாரிடம் தகராறு செய்துள்ளார்.

சண்டிகரில் செக்டார் 51 பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்சிங் மர்வா. வக்கீலான இவர் சம்பவத்தன்று வெள்ளை நிற காரில் அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு ரவுண்டானாவில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறிச்சென்று காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் காரை வழிமறித்து அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழை கேட்டுள்ளனர். மேலும் அவரது காரின் நம்பர் பிளேட் முன்பு துணி ஒன்று தொங்கி உள்ளது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது ஆவணங்களை காட்ட மறுத்த அவர் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் தன்னை மாஜிஸ்திரேட் எனக்கூறி போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பிரகாஷ்சிங் மர்வா, எதுவாக இருந்தாலும் எனக்கு செல்லான் அனுப்புங்கள் எனக்கூறி போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து அவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News