இந்தியா

கோப்புபடம். 

மத்திய அரசு ஊழியா்களுக்கு விரைவில் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு

Published On 2023-08-07 04:03 GMT   |   Update On 2023-08-07 04:03 GMT
  • வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
  • அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது.

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன் அடைவாா்கள்.

விலைவாசி உயா்வை அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருகிறது. இப்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி விரைவில் 45 சதவீதமாக உயா்த்தப்பட இருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த மாா்ச் 24-ந்தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.

இது தொடா்பாக அகில இந்திய ரெயில்வே பணியாளா்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலா் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், '4 சதவீத அகவிலைப்படி உயா்வு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், 3 சதவீதம் அளவுக்கு உயா்வு கிடைக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்பதை நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை கணக்கீட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்' என்றாா்.

Tags:    

Similar News