இந்தியா

அதிகாரிகளை நியமிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு மீறுகிறது- டெல்லி அரசு வழக்கு

Published On 2023-05-12 15:05 IST   |   Update On 2023-05-12 15:05:00 IST
  • சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மத்திய அரசு மீறி செயல்படுவதாக டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
  • சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புக்கு பிறகு டெல்லி அரசு ஒரு அதிகாரியை மாற்ற உத்தரவிட்டதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையே அதிகாரிகள் நியமனம் இடமாற்றம் ஆகியவற்றில் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

இதில் அதிகாரிகள் நியமனம் இடமாற்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மத்திய அரசு மீறி செயல்படுவதாக டெல்லி மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் அதிகாரிகள் மீதான கட்டுப்பாடு குறித்த அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவை மத்திய அரசு மீறுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புக்கு பிறகு டெல்லி அரசு ஒரு அதிகாரியை மாற்ற உத்தரவிட்டதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News