இந்தியா

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - முகேஷ் அம்பானி இல்லத்தில் பங்கேற்ற பிரபலங்கள்

Published On 2023-09-20 01:01 IST   |   Update On 2023-09-20 01:01:00 IST
  • முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
  • இதில் கலந்து கொள்ள பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் வருகை தந்தனர்.

மும்பை:

ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் பிரமாண்ட வீடு உள்ளது. அன்டிலியா இல்லம் என அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் இங்கு உள்ளன.

இந்நிலையில், இந்த அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வருகை தந்தனர்.

நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிகை ரேகா, ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் வருகை தந்தனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜவான் திரைப்பட இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News