இந்தியா

சண்டை நிறுத்தம் எதிரொலி: சண்டிகரில் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கம்

Published On 2025-05-10 20:15 IST   |   Update On 2025-05-10 20:15:00 IST
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
  • பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால், இரவு நேரங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக ஒப்புதல் அளித்து அறிவித்தன.

இந்நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் அறிவிப்பைத் தொடர்ந்து பஞ்சாப்- அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்த 3 நாட்களாக பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால், இரவு நேரங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.

மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் சண்டிகரில் கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சண்டிகர் அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை தானாக முன்வந்து மூடுவதற்கான முந்தைய தடை உத்தரவை இதன் மூலம் திரும்பப் பெறப்படுகிறது.

அனைத்து கடைகளும் நிறுவனங்களும் இப்போது வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News