இந்தியா

மத்திய அமைச்சரவைக் கூட்டம்( கோப்பு படம்)

சர்வதேச அஞ்சல் சங்க விதிமுறைகளில் திருத்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2022-08-10 17:57 GMT   |   Update On 2022-08-10 17:57 GMT
  • 27-வது சர்வதேச அஞ்சல் சங்க மாநாட்டில் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.
  • சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை.

ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் சங்கத்தின் 27-வது மாநாட்டில் சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சட்டவிதிகளின் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.

இதன்படி சர்வதேச அஞ்சல் சங்கத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்புதல் மூலம் இந்திய அஞ்சல் துறை, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் ஆணை பெறுவதுடன், அதனை சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைக்கும். இது சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறை 25 மற்றும் 30 அமல்படுத்த உதவும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News