உலகம்
null

ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா.. சகோதரர்கள் தினம் இன்று - சிறப்புகள் என்ன?

Published On 2025-05-24 11:41 IST   |   Update On 2025-05-24 12:35:00 IST
  • தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல.
  • எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது.

ஆண்டுதோறும் மே 24 (இன்று) சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசங்கள் கடந்த உலக பந்தமான இது மனித உறவுகளிலேயே தனித்துவமானது.

தாய், தந்தை ஆகிய பந்தங்கள் ஒரு சில உணர்வுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை. அன்பு, கோபம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் நம்மால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரே ஜீவன் சகோதரனே.

தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல. நமக்காக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நம்முடன் நமது பக்கம் நிற்கும் சகோதரனிடத்தில் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புணவர்வுக்கு ஈடேதும் இல்லை.

சகோதரன் என்பவன் வாழ்நாள் நண்பன். சகோதரன் உடனான சிறுவயது குறும்புகள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடு. அன்பின் தனித்துவமான வெளிப்பாடுகள் அவை. ஒருவருக்கொருவர் எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது. எதிர்பார்ப்பின்றி உருவான உறவு.

இன்று உலகெங்கிலும் மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பலரும் வலியறுத்துகின்றனர். ஏனெனில் நட்பை விட சகோதரத்துவத்தின் பிணைப்பு ஆழமானது.

ஒரு நல்ல நண்பன் நூறு சகோதரர்களுக்கு சமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல சகோதரன் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். 

Tags:    

Similar News