இந்தியா

துப்பாக்கி முனையில் தொழில் அதிபர் கடத்தல்- சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு

Published On 2023-08-10 10:21 GMT   |   Update On 2023-08-10 10:48 GMT
  • பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
  • மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை கோரேகான் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இசை கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்து வருகிறார். நேற்று இவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்தது. அவர்கள் துப்பாக்கி முனையில் ராஜ்குமார் சிங்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இதனை தடுக்க முயன்ற அலுவலக ஊழியர்களை அவர்கள் மிரட்டினார்கள்.

ராஜ்குமார் சிங்கை அந்த கும்பல் தகிசரில் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.எல்.ஏ பிரகாஷ்சுர்லே அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்ஆளும் கட்சியை சேர்ந்த பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News