காதலியின் வாயில் வெடிமருந்து குச்சியை சொருகி வெடிக்கச் செய்த காதலன் - மைசூரு லாட்ஜில் நேர்ந்த விபரீதம்
- கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20).
- இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷிதா (20). இவரது கணவர் வெளியூரில் பணியாற்றி வருகிறார்.
தர்ஷிதாவுக்கு தனது உறவினர் சித்தராஜுவுடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருந்தது.
சமீபத்தில், தர்ஷிதா தனது மாமியார் சுமதாவின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்கம் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தைத் திருடி, சித்தராஜுவுடன் கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்றார்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதாவும் சித்தராஜுவும் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர்.
இந்நிலையில் திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று (திங்கள்கிழமை) லாட்ஜ் அறையில் வைத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்தில், சித்தராஜு, சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து குச்சியை தர்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்தார்.
இதில் தர்ஷிதாவின் முகம் சிதைந்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது மொபைல் போன் வெடித்ததால் தான் இறந்ததாக லாட்ஜ் இருதவர்கள் மற்றும் அக்கபக்கத்தினரை சித்தராஜு நம்ப வைக்க முயன்றார்.
இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சித்தராஜுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.