இந்தியா

பாஜக நிர்வாகி படுகொலை- இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்

Published On 2022-07-27 12:09 GMT   |   Update On 2022-07-27 12:09 GMT
  • குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
  • தட்சிண கன்னடா மாவட்டம் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்லாரே போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

விஎச்பி சார்பில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்களில் அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், பிரவீன் நெட்டாரு இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து சுள்ளியா தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News