இந்தியா

திருப்பூரில் இருந்து தெலுங்கானாவுக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட காட்சி.

ஆந்திராவில் பறவை காய்ச்சல் தீவிரம்- 3 மாதம் கோழி கறி விற்க தடை

Published On 2025-02-12 10:02 IST   |   Update On 2025-02-12 10:02:00 IST
  • ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.
  • 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி , மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பறவை காய்ச்சல் காரணமாக கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் பல லட்சம் கோழிகள் தினமும் இறந்து வருகின்றன.

இதனால் ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.

ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, மாவட்டம், தனுகு,வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யும் தடை விதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கோழி மற்றும் முட்டைகளை பயன்படுத்தாமல் எச்சரிக்கையாகவும், சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கோழி குஞ்சுகள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வருகின்றனர். திருப்பூரில் இருந்து தெலுங்கானா மாநிலம், காமி ரெட்டிக்கு 2 லாரிகளில் 30 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கொண்டு செல்லப்பட்டன.

அந்த லாரிகளை புல்லூர் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இன்று காலை மீண்டும் லாரிகளை திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் இருந்து இதுவரை 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட கோழி குஞ்சுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News