இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்- பிற்பகல் 1 மணி வரை 42.31 சதவீத வாக்குப்பதிவு

Published On 2025-11-06 14:05 IST   |   Update On 2025-11-06 14:05:00 IST
  • முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  • வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீத விவரம்:-

முசாபூர் 45.41, வைஷாலி 42.61, சமஸ்திபூர் 43.03, பாட்னா 37.72, சஹர்சா 44.20, கோபால்கஞ்ச் 46.73, சீவான் 41.20, போஜ்பூர் 41.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News