இந்தியா

பீகாரில் தேர்வர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்- வீடியோ

Published On 2024-12-06 13:09 IST   |   Update On 2024-12-06 13:09:00 IST
  • போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
  • அனுமதி இல்லாததால் போராட்டம் நடத்தியது சட்டவிரோதமானது.

பீகார் மாநிலம் பாட்னாவில் 70-வது சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வை தேர்வை முன்பு போலவே நடத்தக்கோரி அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதுதொடர்பாக டிஎஸ்பி அனு குமாரி கூறுகையில், அனுமதி இல்லாததால் போராட்டம் நடத்தியது சட்டவிரோதமானது. அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் குழுவில் ஐந்து பேரின் பெயர்களை நாங்கள் கோருகிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News