இந்தியா

ராகுல் காந்திக்கு அமேதியில் நடந்தது தேஜஸ்விக்கு ரகோபூரில் நடக்கும்: பிரஷாந்த் கிஷோர் எச்சரிக்கை

Published On 2025-10-11 21:49 IST   |   Update On 2025-10-11 21:49:00 IST
  • நான் ரகோபூரில் போட்டியிட்டால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்.
  • அப்படி போட்டியிட்டால் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு நடந்தது தேஜஸ்விக்கு நடக்கும்.

பீகார் தேர்தலில், தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சியில் களம் இறங்குகிறது.

இங்குள்ள ரகோபூர் சட்டமன்ற தொகுதி, லாலு பிரசாத் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி ராப்ரி தேவி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இருவரும் முதல்வராக இருந்துள்ளனர். இவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் 2015 மற்றும் 2020-ல் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக பிரஷாந்த் கிஷோர் சூசகமாக தெரிவித்துள்ளார். இங்கு நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எதிர்கொண்டதை, தேஜஸ்வி யாதவ் எதிர்கொள்வார்" என்றார்.

ராகுல் காந்தி 2010 மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதைத்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News