இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்- 122 தொகுதிகளுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2025-11-11 07:13 IST   |   Update On 2025-11-11 08:45:00 IST
  • முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

Tags:    

Similar News