இந்தியா

பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரம்: சித்தராமையா புதிய தகவல்

Published On 2024-03-02 06:13 GMT   |   Update On 2024-03-02 06:13 GMT
  • குண்டு வைத்த நபர் பேருந்தில் வந்துள்ளார்.
  • டைமர் செட் செய்து வெடிகுண்டடை வெடிக்கச் செய்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா போலீசார் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தடவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

பா.ஜனதா தலைவர்கள் சித்தராமையான தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர், சித்தராமையாக இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை கர்நாடாக அரசு நடத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நியைியில் சித்தராமையாக இது தொடர்பாக தெரிவிக்கும்போது "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்து வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை மந்திரி சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். நான் மருத்துவமனைக்கும், சம்பவ நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜனதா இதை அரசியலாக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவரின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு பையுடன் 30 முதல் 39 வயதிற்கு உட்பட்ட ஒருவர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News