இந்தியா

ஓலா, ஊபர் இரண்டிலும் ஒரே டிரைவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்

Published On 2024-04-09 04:10 GMT   |   Update On 2024-04-09 04:10 GMT
  • சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
  • பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

நகர பகுதிகளில் பஸ், ரெயில் நிலையம் அல்லது விமான நிலையம் செல்வோர் தற்போது ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு செல்வதற்கு கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு முன்பதிவு செய்து விட்டால் வாகனங்கள் வாடிக்கையாளர்களை தேடி வந்து விடுவதால் எளிதில் பயணம் செய்ய முடிகிறது. சில பயணிகள் ஓலா, ஊபர் என இரண்டிலும் முன்பதிவு செய்து விட்டு எது முதலில் வருகிறதோ அதில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ஓலா, ஊபர் இரண்டிலும் முன்பதிவு செய்திருந்தார். அப்போது இரண்டு வாகனங்களுக்குமே ஒரே டிரைவர் கிடைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சம்பவத்தை பற்றி வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஓலா மற்றும் ஊபர் இரண்டிலும் ஒரே சவாரி கிடைத்தது. இது எப்படி சாத்தியம்? என்று கூறியிருந்தார். அவரின் பதிவு வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

இது தொடர்பாக பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.



Tags:    

Similar News