இந்தியா

டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

Published On 2025-02-23 18:42 IST   |   Update On 2025-02-23 18:45:00 IST
  • டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.
  • எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியானாலும் கடந்த 19ம் தேதி இரவுதான் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவித்தது.

அதன்படி. ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.-வை முதல்வராக அறிவித்ததை அடுத்து, ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதைதொடர்ந்து, டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை எதிர்கொள்ள ஒரு வலுவான பெண் தலைமை தேவை. அதற்கு அதிஷி தகுதியானவர் என எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்தை முன்வைத்தனர். கூட்டத்தில் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அதிஷி இதன்மூலம் சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Tags:    

Similar News