இந்தியா

கர்நாடகாவில் நிலஅதிர்வு: பொதுமக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

Published On 2023-12-08 10:00 IST   |   Update On 2023-12-08 10:01:00 IST
  • சுமார் 18-வது கிலோ மீட்டரில் இன்று காலை 6.52 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
  • மேலும் நில அதிர்வு ஏற்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் வடகர்நாடகாவில் உள்ளது விஜயபுரம் மாவட்டம். இங்கு இருந்து சுமார் 18-வது கிலோ மீட்டரில் இன்று காலை 6.52 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால் பொதுமக்கள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கியது. இதையடுத்து தூங்கி கொண்டு இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த நில அதிர்வு சுற்று வட்டாரத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு ஓடியது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் முழுவதும் இந்த நில அதிர்வு பற்றி பொதுமக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில அதிர்வு பற்றிய தகவல் தெரியவந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சந்தித்து அஞ்சம் அடைய வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும் மேலும் நில அதிர்வு ஏற்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து உள்ளனர்.

Tags:    

Similar News