இந்தியா

ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-01-02 08:07 IST   |   Update On 2025-01-02 08:07:00 IST
  • கைக்கடிகாரத்தின் விலைதான் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
  • இணையத்தில் வைரலான புகைப்படத்தை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன் மற்றும் பின் நடைபெற்ற திருமண கொண்டாட்டங்கள் மிகவும் ஆடம்பரமாகவும், அனைவரையும் ஆச்சரியப்படும் வகையிலும் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த ஆடம்பர திருமண விழா பற்றி இணையதளங்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் உடனான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்தான் தற்போது இணைய வாசிகளால் அதிகம் தேடப்படும் பொருளாக உள்ளது. அதாவது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.22 கோடியாம். இந்த விலைதான் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



ஆனந்த் அம்பானி அணிந்திருந்தது Richard Mille RM 52-04 Skull Blue Sapphire வாட்ச் என்றும் அதன் மதிப்பு ரூ.22 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த அரிய கைக்கடிகாரம் உலகிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை 3 மட்டும் தானாம். இந்த கைக்கடிகாரம் பெட்டி வடிவிலும், உள்ளே கடற்கொள்ளையர் மண்டை ஓடும் மற்றும் வெளிப்புறத்தில் குறுக்கு வடிவிலான எலும்புகளை கொண்டுள்ளது.

இணையத்தில் வைரலான புகைப்படத்தை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலரோ இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் என்று கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News