இந்தியா
டெல்லியில் அமேசான் மானேஜர் சுட்டுக்கொலை
- நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தாக்குதல்
- தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
அமேசான் நிறுவனத்தில் மானேஜராக வேலைப்பார்த்து வந்தவர் 36 வயதான ஹர்ப்ரீத் கில். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பஜன்புரா பகுதி சுபாஷ் விஹார் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பேர் மோட்டார் சைக்களில் வந்து, ஹர்ப்ரீத் கில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் ஹர்ப்ரீத் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கோவிந்த் சிங்கின் வலது காது பக்கம் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.