இந்தியா

ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக கேரள அரசு தகவல்

Published On 2025-06-27 18:49 IST   |   Update On 2025-06-27 18:49:00 IST
  • ஹேமா கமிட்டி அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன.
  • வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் வழக்குகள் கைவிடப்பட்டதாக அறிவிப்பு.

ஹேமா கமிட்டி கேரள அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை, மலையாள திரையுலகை அதிர்ச்சியில் உலுக்கியது. சினிமா நடிகைகள், சினிமா துறைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அறிக்கை அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் முன்வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக்கு குழு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் கைவிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News