இந்தியா

காற்று மாசு எதிரொலி: மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- டெல்லி துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்

Published On 2023-11-03 19:22 IST   |   Update On 2023-11-03 19:22:00 IST
  • டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
  • மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இன்று 7-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 800ஐத் தாண்டியது. முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர், " குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம். மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி முதலமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சரை ராஜ் நிவாஸில் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்ய உள்ளேன்" என்றார்.

Tags:    

Similar News