கூடுதல் கட்டணம் வசூல்- நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலை., உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
- நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
- நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.
இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.
நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.